உலக செய்திகள்
- சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகங்களில் முதன்முறையாக வாட் வரி விதிக்க முடிவு(அந்நாட்டு அரசுகள்) செய்துள்ளது
- பிரான்ஸில், 2020ம் ஆண்டில் வீட்டுவரி முழுவதுமாக அகற்றப்படும் என்று இம்மானுவேல் மேக்ரான்(அந்நாட்டு ஜனாதிபதி) அறிவித்துள்ளார்
- பாலஸ்தீனம், அமெரிக்காவிற்கான தங்கள் நாட்டு தூதரை (ஹுசாம் சோம்லத்) நாடு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது
- இஸ்ரேலில் 2, 700 ஆண்டுகள் பழையான கவர்னர் முத்திரையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்
- சீனாவில், தந்தத்திற்காக யானைகள் கொல்லப்படுவதை தடுக்கும் வகையில் யானை தந்தங்களை வாங்கவும், விற்கவும் தடை செய்யும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது
தேசிய செய்திகள்
- புதிய வெளியுறவுத்துறை செயலாளராக ‘விஜய் கேசவ கோகலே’ நியமிக்கப்பட்டுள்ளார்
- அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் கீழ் பயனைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது
- இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்கள் தொடர்பான பட்டியலை இரு நாடுகளும் 27வது முறையாக பரிமாறிக்கொண்டது
- ஐஐஎம்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதா (டிப்ளமோவுக்கு பதிலாக டிகிரி சான்றிதழ்) நிறைவேற்றப்பட்டுள்ளது
- தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் குறித்து 4,000 நகரங்களில் ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது
- ஆந்திர மாநில முதல்வர் சந்திர பாபு நாயுடு 2018ம் வருடத்தை தெலுங்கு மொழி வளர்ச்சிக்கான வருடமாக அறிவித்துள்ளார்
விளையாட்டு செய்திகள்
- ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், முதல் முறையாக விதர்பா அணி சாம்பியன் பட்டம் வென்றது
Read More : http://weshineacademy.com/enig...