உலக செய்திகள்
- கல்வி பயில வசிகரமான நாடுகள் பற்றிய கருத்துக்கணிப்பில் கனடா மற்றும் பிரான்ஸ் 1, 2வது இடத்தில் உள்ளது. ஜெர்மனி, அமெரிக்கா, பிரத்தானியா 3,4,5 வது இடத்தில் உள்ளது
- அமெரிக்காவை ‘பாம்’ என்கிற பனிப்புயல் தாக்கியது
- இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் கடலோரப் பகுதியில் ‘எலினோர் புயல்’ தாக்கியது
- வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நேரத்தின் போது தங்களது தனிப்பட்ட சொந்த செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது
- பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உதவியை அமெரிக்க அரசு நிறுத்தி உள்ளது
- உலகலேயே கச்சா எண்ணெயை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு என்ற பெயரை அமெரிக்கா பெற உள்ளதாக சந்தை ஆய்வு நிறுவனம்(ரைஸ்டாட்) தெரிவித்துள்ளது
- இந்தியா - இலங்கை இடையேயான நட்புறவை மேம்படுத்தும் விதமாக, இந்தியா சார்பில் 209 அவசர ஊர்திகள் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது
- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாஹு , பிரதமர் நரேந்திர மோடிக்கு(இந்தியா) கடல் நீரைக் குடிநீராக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட ஜீப்பை பரிசளிக்க உள்ளார்
தேசிய செய்திகள்
- உச்ச நீதிமன்றம், உயர்நீதி மன்ற நீதிபதிகளுக்கான சம்பள உயர்வு குறித்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
- நாட்டில் தினமும் காலையில் தேசிய கீதம் ஒலிக்கும் கிராமங்கள் - பஹாக்பூர்(அரியானா), ஜமிகுண்டா(தெலுங்கானா)
- உத்தர பிரதேச மாநிலக் கல்வித்துறை, அரசு பள்ளிகளின் விடுமுறை நாட்களை குறைத்து(17 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது), வேலை நாட்களை அதிகரித்துள்ளது
- ஆந்திர மாநிலத்தில் மீனவர்களுக்கு கைரேகை மற்றும் ஐடிகார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது
- சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளைகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் மற்றும், அரசு வழக்கறிஞர்கள் (சிவில் மற்றும் குற்றவியல்) என 103 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
- தேசிய பார்வையற்றோர் சங்கம் சார்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘உலகின் மிகச் சிறிய தவளை’ என்ற நூல் பிரெய்லி வடிவில் வெளியிடப்பட்டுள்ளது
- சாதி மறுப்பு திருமணம் செய்தால் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
- நாட்டில் மாணவர்கள் தற்கொலை அதிகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளம் 1, 2வது இடத்தில் உள்ளது. தமிழகம் 3வது இடத்தில் உள்ளது
- 2017ம் ஆண்டு விவேகானந்தர் மண்டபத்துக்கு(கன்னியாகுமரி) 21.3 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்
Read More : http://weshineacademy.com/enig...