தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் ஆகிய பகுதிகளுக்கான தேசிய மாணவர் படையின் (National Cadet Corps – NCC) இயக்குநரகம், ஜோத்பூரில் நடைபெற்ற அகில இந்திய வாயு சேனைப் போட்டியில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.
தொடர்ந்து 2 – வது முறையாக இந்த இயக்குநரகம் சாம்பியன்ஸ் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளது.
இந்திய நிகழ்வுகள்
உலக வங்கியின் நிதி பங்களிப்புடன் மத்திய அரசின் ஜல் மார்க் விகாஸ் என்ற திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்நிலை கப்பல் போக்குவரத்து திட்டத்தை இந்தியப் பிரதமரால் நவம்பர் 12 அன்று தொடங்கப்பட்டுள்ளது
இந்திய நீர்வழி – 1 (National Waterway – 1) என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் படி ஹால்தியா – வாரணாசி இடையில் கங்கை ஆற்றில் தொடங்க உள்ளது
குறிப்பு:
இத்திட்டமானது அடுத்த கட்டமாக ஹல்தியா – சாஹிப்கஞ்ச் – வாரணாசி ஆகிய பகுதிகளில் 3 சரக்கு முனையங்கள் அமைக்கப்பட்டு விரிவுப்படுத்தப்பட உள்ளது.
2019 ஆம் ஆண்டிலிருந்து 2022-ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளுக்கு பன்னாட்டு தொலைதொடர்பு ஒன்றியத்தின் (ITO – International Telecommunication Union) உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
1952 ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு தொலைதொடர்பு ஒன்றிய ஆணையத்தில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இருந்து வருகிறது.
குறிப்பு:
சமீபத்தில் பன்னாட்டு தொலைதொடர்பு ஒன்றிய தெற்காசிய அலுவலகம் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க மையம் ஆகியவற்றை புதுடெல்லியில் அமைக்க பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
உலக நிகழ்வுகள்
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கூறுகளைக் கொண்ட சூரிய ஒளிக் கதிர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் பொருட்களுக்கு தடை விதித்த (Sunscreen Products) உலகின் முதலாவது நாடாக தென் பசுபிக் தீவில் உள்ள நாடான பலாவு உருவெடுத்துள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
AIBA (International Boxing Association) பெண்கள் உலக சாம்பியன்ஷிப்பின் 10-வது பதிப்பின் விளம்பர தூதராக ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற எம்.சி. மேரி கோம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
புதுடெல்லியின் இந்திராகாந்தி அரங்கில் நடைபெறவிருக்கும் 2018 ஆம் ஆண்டிற்கான AIBA பெண்கள் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு மேரி கோம் தலைமை தாங்குகிறார்.
பொருளாதார நிகழ்வுகள்
2019 – ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக குறையும் என மூடிஸ் இன்வெஸ்டர் சர்வீஸ் நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. 2017 – 1028 ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக குறைந்துள்ளது.
குறிப்பு:
2016 – 2017 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
பூமிக்கு நிலவைப் போன்று மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை ஹங்கேரியன் விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க துகள்களால் உருவானதான இந்த நிலவுகள், ஒழிந்திருக்கும் நிலவுகளாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலவுகளானது பூமியில் இரு;நது சுமார் 2,50,000 மைல் தொலைவில் உள்ளன.
முக்கிய தினங்கள்
தேசிய கல்வி நாள் – நவம்பர் 11 (அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்த நாள்)
சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கிய மௌலானா அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவு கூடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11 – ஆம் நாள் தேசிய கல்வி நாளாக கொண்டாடப்படுகிறது.
குறிப்பு:
மௌலானா அபுல்கலாம் ஆசாத் 1947 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 1958-ம் ஆண்டு பிப்ரவரி – 2 வரை இவர் கல்வியமைச்சராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுகள்
பிரான்ஸின் தலைநகரான பாரிசில் இயங்கிவரும் “எல்லைகளில்லாத பத்திரிக்கை நிருபர்கள்” என்ற அமைப்பின் கீழ் வழங்கப்படும் பத்திரிக்கை சுதந்திரத்திற்காக வீரதீரத்துடன் செயல்படும் நபர்களுக்கான விருதானது(2018), இந்திய பெண் பத்திரிக்கையாளரான சுவாதி சதுர்வேதிக்கு வழங்கப்பட்டுள்ளது
குறிப்பு:
இவ்விருதானது 2018 – முதல் தான் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.