உலகிலேயே அதிக குளிரான இடம் - ஒய்ம்யாகோன் (சைபீரியா)
இலங்கை அதிபரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே நீடிக்க முடியும் என்று இலங்கை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது
உலக வரலாற்றில் பெரிய பணக்காரராக இருந்த முஸ்லிம் மன்னர் - மாலியை(ஆப்பிரிக்கா) ஆண்ட மன்சா மூசா
ஆல்பே மாகாணத்தில்(இந்தோனிஷியா) உள்ள மாயோன் எரிமலை வெடிக்கும் நிலையில் உள்ளது
பிரத்தானியாவில் முதல் முறையாக சீக்கிய பெண்(பிரீத் கௌர் கில்) நிழல் அமைச்சரவையில்(ஆளும் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கும், விமர்சிப்பதற்கும் அமைக்கப்படுவது) எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்
சமூக நல ஒப்பந்தத்தின் படி சுவிட்சர்லாந்துக்கு 41.5 மில்லியன் பிராங்குகளை நிதியாக வழங்க பிரான்ஸ் ஒப்புக் கொண்டது
தேசிய செய்திகள்
கைவிரல் ரேகை தேய்வதால், ஆதாரில் முக அடையாளத்தை வைத்து சரிபார்க்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
ஏர் இந்தியா பங்குகளை நான்காக பிரித்து விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது
நாட்டில் உள்ள 28 முக்கிய நகரங்களில் ரூ.36,290 கோடி செலவில் வட்ட சாலைகள் அமைக்கப்பட உள்ளது என்று நிதின் கட்கரி(மத்திய சாலை மற்றும் போக்குவரத்து) தெரிவித்துள்ளார்
திருப்பூர் பரஞ்சோதி நகரில் (திருமூர்த்தி மலையில்) சர்வதேச பொங்கல் விழா நடைபெற்றது
குழந்தைகளுக்கு நோய் வராமல் தடுக்கும் விதத்தில் சூடு போடும் விநோதமான பழக்கம் மத்கர்கோலா(ஒடிசா) கிராமத்தில் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது
விளையாட்டு செய்திகள்
மகளிர் குத்துச்சண்டை இளையோர் மற்றும் ஜுனியர் பிரிவு குத்துச்சண்டை போட்டிகளில் இந்திய அணி 12 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை வென்றது
3வது சீசன் பிரீமியர் பாட்மிண்டன் லீக்(பிபிஎல்) போட்டியில் ஹைதராபாத் ஹன்டர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது