புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகமானது இந்திய காற்று சுழலி சான்றிதழ் திட்டம் (Indian wind Turbine certification scheme- IWTCS) என்ற புதிய திட்டத்தின் வரைவை தயார் செய்துள்ளது.
இது சென்னையில் உள்ள தேசிய காற்று சக்திக்கான நிறுவனத்துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டுள்ளது.
•ஐ.நா. அவை ஆதரவுடன் இந்தியா – ரஷ்யா இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியான இந்த்ரா – 2018 (Exercise INDRA- 2018), உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாபினா இராணுவ முகாம் துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தடலில் (Babina Military Station) நவம்பர் 18 முதல் நடைபெறவுள்ளது.
இந்தியா, ரஷ்யா கூட்டு இராணுவப் பயிற்சி, இந்த்ரா பயிற்சி, வரிசையில் பத்தாவது பயிற்சி இதுவாகும். இரஷ்யா கூட்டமைப்பின் ஐந்தாவது இராணுவப் படைப் பிரிவும், இந்தியாவின் ஆயுதம் தாங்கிய காலாட்படைப் பிரிவும் இப்பயிற்சியில் பங்கேற்க உள்ளன.
உலக நிகழ்வுகள்
சமுத்திர சக்தி-(கடற்பயிற்சி) – இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தவும், கடல்சார் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இயங்குதிறனை மேம்படுத்தவும் சிறந்த நடைமுறைகளை பரிமாற்றம் செய்வதையும் நோக்கமாகக் கொண்ட இருதரப்பு கடற்படை பயிற்சியான சமுத்திர சக்தியின் முதல் பதிப்பு இந்தோனேசியாவின் சூரபயா துறைமுகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்தியாவின் சார்பில், விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படையின் “INS ராணா” என்ற கப்பல் பங்குபெற்றது.
சீனாவின் அரசு செய்தி நிறுவனம் சின்குவா (Xinhua) சமீபத்தில் உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) செய்தி அறிவிப்பாளரை, Wuzhen மாகாணத்தில் நடைபெறும் 5வது உலக இணைய மாநாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
சூரியனுக்கு அருகில், ‘சூப்பர் பூமி’ ஒன்றை விண்ணியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது சூரியனுக்கு மிக அருகில் உள்ள சிறிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்திற்கு “பர்நார்ட் நட்சத்திரம் பி” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது சூப்பர் பூமி எனவும் அழைக்கப்படுகிறது.
இந்நட்சத்திரத்தை ஒரு கிரகம் ஒன்று சுற்றி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது பூமியை போன்று 3.2 மடங்கு பெரியது. இக்கிரமானது “பர்நார்ட் நட்சத்திரம் பி”-யை 233 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது (ISRO) ஜி சாட் – 29 (GSAT – 29) என்ற உயர்தர இணைய வசதிக்கான தகவல் தொடர்பு செயற்கைக்கோளை, அதிக எடையை தாங்கிச் செல்லக் கூடிய ஜி.எஸ்.எல்.வி- மார்க் 3 – டி2 (GSLV – Mark III – D2) என்னும் ராக்கெட் மூலம் நவம்பர் 14 அன்று விண்ணில் செலுத்தியுள்ளது.
GSLV – mark III – ஐந்தாம் தலைமுறைக்கான ராக்கெட் ஆகும். இஸ்ரோ இதுவரை GSLV வரிசையில் 12 ராக்கெட்களை செலுத்தியுள்ளது.
விருதுகள்
இந்தியாவைச் சேர்ந்த பகுதிநேரப் பத்திரிக்கையாளரான சுவாதி சதுர்வேதி 2018ம் ஆண்டின் துணிவிற்கான இலண்டன் பத்திரிக்கை சுதந்திர விருதை பெற்றுள்ளார்.
பாரீசை மையமாகக் கொண்ட Reporters Sons Frontier (RSF) அல்லது எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற அமைப்பின் லண்டன் பிரிவினால் இவ்விருதானது வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பு
சுவாதி சதுர்வேதி ‘I am a Troll: Inside the secret world of the BJP’s digital Army’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நியமனங்கள்
இந்திய தடகள வீராங்கனை ஹீமா தாசை, யுனிசெப் இந்திய (UNICEF) அமைப்பு இந்திய இளையோரின் தூதராக நியமித்துள்ளது. உலக U-20 தடகள சாம்பியன் ஷிப் தொடரின் மகளிர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற ஹீமா தாஸ், உலக அளவிலான தடகள போட்டியின் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
குறிப்பு
இந்திய அரசு 2018ம் ஆண்டிற்கான அர்ஜுனா விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய தினங்கள்
உலக நுண்ணுயிர் எதிர்பொருள் விழிப்புணர்வு வாரம் – நவம்பர் 12 – நவம்பர் 18.
நுண்ணுயிர் எதிர்பொருட்களின் எதிர்ப்பு பற்றி உலகளாவிய விழிப்புணர்வை அதிகரிக்கவும் பொதுமக்களிடையே சிறந்த நடைமுறைகளை ஊக்குவிக்கவும், ஆண்டுதோறும் நவம்பர் 12 முதல் 18 வரை உலக நுண்ணுயிர் எதிர்பொருள் விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
2018ம் ஆண்டின் நுண்ணுயிர் எதிர்பொருட்கள் விழிப்புணர்வு வாரத்தின் கருத்துருவானது, “தனிப்பட்ட முன்னுரிமைகளை பிரதிபலிக்கும் வகையில் நாடுகளுக்கு அதிக நெகிழ்வு தன்மை”-யை வழங்குவதாகும்.