சர்வதேச நாடுகளிடையே ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள், ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை உருவாக்கப் பயன்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் ஆஸ்திரேலிய கூட்டமைப்பில்(ஏஜி) இந்தியா 43வது உறுப்பினராக இணைந்துள்ளது
உலகில் அதிகமானோர் பார்வையிட்ட நாடுகள் பட்டியலில் பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது
2005-2015ம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கு(ஹரிந்தர் மாலி மற்றும் இந்திரா நாயுடு) அமைச்சர் பதிவி அளிக்கப்பட்டுள்ளது
உலகில் அதிக பிரசவங்கள் நடைபெறும் மருத்துவமனை – ஜோஸ் ஃபாபெல்லா நினைவு மருத்துவமனை – மணிலா (பிலிப்பைன்ஸ்)
வேலைக்காக குவைத் நாட்டுக்கு செல்ல பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுக்கு அரசு தடை விதித்துள்ளது
ஐரோப்பாவை ஃபியான் புயல் தாக்கியது
சவுதி அரேபியாவில் 35 ஆண்டுகள் தடைக்கு பின்னர் திறக்கப்பட்ட திரையரங்குகளில் முதல் படமாக ‘இமோஜி’ திரைப்படம் திரையிடப்பட்டது
சுவிட்சர்லாந்தில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்(நிக்லஸ் சாமுவேல் குக்ஜர் - வறுமையின் காரணமாக தத்துகொடுக்கப்பட்டவர்) எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
தேசிய செய்திகள்
2018ம் ஆண்டை சிறுதானியங்களின் ஆண்டாக மத்திய அரசு அறிவித்துள்ளது
வனப்பகுதியை இதர பணிகளுக்கு ஒதுக்கீடு செய்ததில் ஹரியானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது
இந்திய சுகாதாரக் கூட்டமைப்பான ‘NAT HEALTH’ அனைவருக்கும் கட்டாய மருத்துவக் காப்பீடு வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு பட்ஜெட்டில் அறிமுகம் செய்யவுள்ளது
புதிதாக தயாரிக்கப்பட்ட அதிநவீன ரோந்து கப்பலான ‘விஜயா’, இந்திய கடலோர காவற்படையிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது
தாஜ்மஹாலை காண இன்று முதல் நாள்தோறும் 40,000 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என உத்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது
மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் தமிழகத்தின் ஈரோடு உள்பட 9 புதிய நகரங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது
விளையாட்டு செய்திகள்
சிஎஸ்கே(சென்னை சூப்பர் கிங்ஸ்) அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எல் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்
டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்கான சர்வதேச தரவரிசையில் (ஆடவர் 18 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில்) இந்திய வீரர் ‘மானவ் தக்கார்’ 2வது இடத்தில் உள்ளார்
ஐபிஎல் போட்டிக்கான ஒளிப்பரப்பு உரிமைகளை வாங்கியுள்ள ஸ்டார் நிறுவனம், போட்டியை விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளது