சுவிட்சர்லாந்தில் நாளை நடைபெறும் சர்வதேச அளவிலான பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
விமான பயணத்தின் போது பயணிகள் மொபைல் பேசவும், இன்டர்நெட் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கலாம் என டிராய் பரிந்துரை செய்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் சாலை திட்டப் பணிகளுக்காக 1.50 லட்சம் கோடி ஒதுக்கப்பட உள்ளதாக நிதின் கட்கரி (மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.
ஆ.ராசா எழுதிய ‘தி 2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற புத்தகத்தை டெல்லியில் ஃபரூக் அப்துல்லா (ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்) வெளியிட்டார்.
புது டெல்லியில் நடைபெற்ற தேசிய ஃபெடரேஷன் கோப்பை 2017-18 போட்டியில் கிரிஷ் ஆர்.கௌடா (கர்நாடகம்) வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
விளையாட்டு செய்திகள்
சார்ஜாவில் நடைபெற்ற பார்வை அற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.
ஐபிஎல் போட்டியில் ஏலத்திற்கு வரும் வீரர்களின் இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று (20-1-2018) வெளியிட்டது. இதில் அஸ்வின் (தமிழகம்) உட்பட 16 பேர் முன்னணி வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் பிரிவில் இந்திய ரயில்வேயை தமிழகம் வீழ்த்தியுள்ளது.
அமெரிக்க தடகள வீரரான கிறிஸ்டியன் கோல்மேன் 60 மீட்டர் உள்ளரங்கு ஓட்டத்தில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
ஜீனியர் உலக கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணி கனடாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.