லைபீரியா (ஆப்பிரிக்கா) அதிபராக ஜார்ஜ் வேக் (முன்னாள் கால்பந்து வீரர்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவரை சேர்க்க ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மின்சாரத்தை (அனல் மின்சாரம், புனல் மின்சாரம், அணு மின்சாரம் என்று பல வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால்) பயன்படுத்தும் மக்களுக்கு கட்டணம் இல்லை என்றும், அதிக மின்சாரத்தைப் பயன்படுத்த ஊக்கத்தொகையும் அளிப்பதாக ஜெர்மன் அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட (பனாமா ஆவணக் கசிவு விவகாரத்தில்) நவாஸ் ஷெரீஃப் நேற்று (30-12-2012) சவூதி அரேபியா சென்றார்.
தேசிய செய்தகள்
ஜனவரி 1ம் தேதி முதல் ஒடிசா காவல் துறை பணிகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று ஆர்.சர்மா (மாநில காவல்துறை டிஜிபி) தெரிவித்துள்ளார்.
கேரள அரசு தம் மாநிலத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்டிகைகளை வரிசைப்படுத்தி புதிய மொபைல் ‘ஆப்’ (செயலி) ஒன்றை ரூ.28 லட்சம் செலவில் தயாரித்துள்ளது.
ஆந்திராவின் ஃபைபர் கிரிட் திட்டத்தின் கீழ் குறைந்த விலை இண்டர்நெட், தொலைப்பேசி, தொலைகாட்சி மூன்றையும் ஒரே கேபிளில் வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மேகாலயத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக செலஸ்டின் லிங்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.